கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் தற்போது கூட்டம் நடந்துகொண்டிருக்கின்றது.
இதில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள், அலரிமாளிக்கைக்கு செல்லுமுன்னர், பல்வேறான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதில், முதலாவதாக கைகளை கழுவவேண்டும்.
பின்னர், கைகளுக்கு தண்ணீர் கலக்கப்படாத ஒருவகையான திரவம் பூசப்பட்டது.
அதன்பின்னர் ஒவ்வொருவரின் உடல் வெப்பம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதுமட்டுமன்றி, ஒருவருக்கு ஒருவர் ஒரு மீற்றர் தூரத்தின் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன.