ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது 71ஆவது பிறந்ததினத்தை, இன்று (24) கொண்டாடினார்.
கட்சி, நான்கரை வருடங்களின் பின்னர் கடுமையான பிளவை சந்தித்திருக்கும் நிலையிலேயே, தனது பிறந்த நாளை, இன்று (24) கொண்டாடினார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வெற்றியீட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களில் 14 பேரை தவிர, ஏனையோர் கட்சியிலிருந்து விலகி, சஜித் பிரேமதாஸ தலைமையிலாய ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டனர்.
இதற்கு முன்னர், இன்றைக்கு 28 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1992 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாஸவின் தந்தையான, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாய்க்க மற்றும் ஜி.எம். பிரேமசந்திர உள்ளிட்டோர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர், கட்சியில் பாரிய பிளவு ஏற்பட்டது.
கட்சியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் பிரிந்து சென்றிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறபிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், தனது 71ஆவது பிறந்த தினத்தை, தன்னுடைய மனைவியுடன் இணைந்து கொண்டாடினார்.