சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு தரப்பினர், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட 107 பேர் காலி பிரதேசத்திலுள்ள 3 விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனரென, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நபர்களைச் சந்திப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாதென தெரிவித்துள்ள அவர், இதில் 34 இலங்கையர்களும் 73 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.