web log free
May 13, 2024

101 ஆக அதிகரிப்பு- மருந்தகங்களை திறக்க அனுமதி

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதன் காரணமாக, வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலிருந்து நாள்தோறும் மருந்துகளை பெற்றுக் கொள்ளும் ஏராளமான நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு ஒரு விசேட திட்டத்தை வகுத்துள்ளது.

அதன்படி, அனைத்து மருந்தகங்களையும் அத்தியாவசிய தேவை கருதி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நோயாளியின் மருத்துவ சான்றிதழ் மற்றும் மருந்து சீட்டை இதற்கான அனுமதிப்பத்திரமாக ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கருத்திற் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

மேலும், மருந்தகங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கும் மற்றும் மருந்துகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் இதன்போது அனுமதி வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரிடம் சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.