கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்களில், இரண்டாவது நபர், சுகமடைந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.
இத்தாலியிலிருந்து சுற்றுலா பயணிகளாக வருகைதந்தவர்களுக்கு வழிகாட்டிய நபரொருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்நிலையில், அவரும் சுகமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டவர்களில், சீன பெண்ணொருவர் உட்பட இலங்கையர்கள் இருவர் சுகமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், மொத்தமாக 102 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், மூவர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு திருப்பிவிட்டனர்.
99 பேர் கண்காணிக்கப்படுகின்றனர் 255 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.