பொலிஸ் ஊரடங்கு நேரம் பற்றிய விபரங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையிலும் நீடிக்கும்.
புத்தளம் மாவட்டத்திலும் வட மாகாணத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றையதினம் நண்பகல் 12 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்படும்.
ஏனைய பகுதிகளில், அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் நாளை (26) தளர்த்தப்பட்டு, அன்றையதினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.