கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல மட்டங்களில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பிலான வேலைத்திட்டங்கள், சுகாதாரம், மக்கள் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவையின் நேரடி கண்காணிப்பின் கீழ் முகாமைத்துவம் செய்யவேண்டும்.
ஆகையால், அமைச்சுகள் மட்டத்தில் தனித்தனி தீர்மானங்களை எடுக்கவேண்டாம் என்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, சகல அமைச்சர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அதுதொடர்பில் மாவட்ட மட்டங்களில் தீர்மானங்களை எடுப்பறத்கு ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியான பசில் ராஜபக்ஷவின் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் ஊடாக அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் தொடர்பு படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரதேச மற்றும் கிராமிய மட்டங்களிலான நடவடிக்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் கண்காணிப்பின் கீழ், பிரதேச செயலாளர்களினால் செயற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடுமையாக தெரிவித்துள்ளார்.