கொரோனா தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனரென, போலித் தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட தனியார் பல்கலைக்கழகமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலையின் அதிகாரியொருவரே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை அடுத்த மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர் அவுஸ்திரேலியாவில், 8 வருடங்களாக வசித்து வந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.