தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுதல் என்பன பின்வரும் முறைப்படி நடைபெறும்.
1. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.
2. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதி, நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம் மதியம் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.இந்த மாவட்டங்களில் மார்ச் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும்.
3. இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் மதியம் 2 மணிக்கு அது அமுலாகும்.இந்த ஊரடங்கு 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுலாகும்.
ஊரடங்கு நேரத்தில் ஒரு மாவட்டத்தை விட்டு அடுத்த மாவட்டத்திற்கு எவரும் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை எங்கும் அழைத்துச் செல்லுதலும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நேரங்களிலும் – விவசாயிகள், சிறு தேயிலை தோட்ட மற்றும் ஏற்றுமதி உப உணவுப் பயிர் விவசாயிகள், தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊடக சேவைகளுக்கும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.