web log free
April 07, 2026

யாழ்ப்பாணத்துக்கு விசேட ஊரடங்கு

வடமாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரையிலும் ஊடரங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

வட மாகாணத்தில், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போதும் நடைமுறையிலிருக்கும் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதியான நாளை வெள்ளிக்கிழமை, காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இந்த மாவட்டங்களில் மார்ச் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Last modified on Thursday, 26 March 2020 15:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd