மரண வீடு அல்லது திருமண வீட்டுக்கு எத்தனை பேர் செல்லலாம் என்பது தொடர்பிலான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமரே புதிய வரையொன்றை விடுத்து அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதனடிப்படையில், மரண வீடொன்றுக்கு 10 பேரும், திருமண வீடொன்றுக்கு ஐவர் மட்டுமே செல்லமுடியும் என அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் பரவாமல் இருக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, அவ்வாறான இடங்கள் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.