கொரோனா வைரசை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்கின்ற உயரிய சேவைக்கு பலம் சேர்க்கும் பொருட்டு, எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 03 ஆம் திகதி வரை வீடுகளிலிருந்து கடமைபுரியும் காலப்பகுதியாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் என்ற பிரிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச, மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தப். பிரிவுக்குள் உள்ளடங்குகின்றன.
இக்காலப்பகுதி அரச விடுமுறை தினமாகக் கருதப்படமாட்டாது. மக்களுக்கு தொடர்ந்தேர்ச்சியாக சேவையாற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆயினும், மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து சுய தனிமைப்படுத்தலுக்கு மக்களுக்கு இடமளிப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஏற்கனவே மார்ச் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வீடுகளிலிருந்து கடமைபுரியும் காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கால எல்லையை நீடிப்புச் செய்வதன் மூலம் கொரோனா வைரசுத் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கலாம் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.