இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தென்னாபிரிக்காவில் மறைந்திருக்கலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் மகேந்திரன் தென்னாபிரிக்க ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ளதை அடுத்து அவர் அங்கு மறைந்திருக்கலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.
பிணைமுறி விற்பனை மோசடி தொடர்பில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், நாட்டைவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
அவர் சிங்கப்பூரில் மறைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அண்மையில் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறான நிலையில், தென்னாபிரிக்க ஊடகமான பிஸ்னஸ் லைவ் இணையத்தளம் கடந்த 27 ஆம் திகதி செய்தி வெளியிட்டதுடன், அதில் அர்ஜுன் மகேந்திரன் வெளியிட்ட கருத்துகளும் உள்ளடங்கியிருந்தன.
இந்த நிலையில், தென்னாபிரிக்க ஊடகமொன்றுக்கு அர்ஜுன் மகேந்திரன் கருத்து வெளியிட்டுள்ள நிலையில் அவர் அங்கு மறைந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.