பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போரிஸ் ஜான்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.