கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர், களுத்துறை மாவட்டத்தில் அட்டலுகம கிராமத்திலுள்ள பல வீடுகளுக்கு சென்றிருந்தமை கண்டறியப்பட்டதை அடுத்து, முழு கிராமமே மூடப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் 26 வீடுகள் இருப்பதுடன் அங்கு 200க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் சுயதனிக்கையில் ஈடுபடுத்தும் நோக்கிலேயே முழு கிராமத்தை மூடி விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேலதிக பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.