கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் ஒருவர், அந்த வைத்தியசாலையி்லிருந்து தப்பியோடிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என அறியமுடிகின்றது.
அதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார பிரிவினர், அந்த நபரை மடக்கிப்பிடித்து, மீண்டும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஹோமாகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு அவர் விரும்பம் தெரிவிக்காமையை அடுத்து, பாணந்துறை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.