புத்தளம் தம்போவ இராணுவ முகாமில் சேவையாற்றி கொண்டிருந்த கோப்ரல் மற்றும் இந்தோனேசியாவில் சுற்றுலா மேற்கொண்டிருந்த ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டமையால் அவ்விருவரும் புத்தளம் வைத்தியசாலையிலிருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவ்விருவரையும் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவர்கள் இருவரின் உடல்களிலும் சந்தேகத்துக்கிடமான மாற்றங்கள் தென்பட்டன. ஆகையால், இருவரையும் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றிவிட்டதாக புத்தளம் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.