web log free
January 05, 2025

அத்தியாவசிய பொருட்களுடன் ஜஸ் கடத்திய மூவர் கைது

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்துக்கு லொறியில் அத்தியாவசிய பொருட்களுடன் ஜஸ் போதை பொருள் கஞ்சா, மற்றும் ஹெரோயின்களை கடத்திச் சென்ற மூவரை வெள்ளிக்கிழமை (27) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த லொறியில் கொழும்பில் அத்தியாவசிய பொருட்களை நேற்று வியாழக்கிழமை (26) ஏற்றப்பட்டு மட்டக்களப்பிற்கு எடுத்துக் கொண்டுவந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை (27) குறித்த லொறியை மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு வாழசைசேனை பொலிஸ் நிலையத்துக்குள் கொண்டுவரப்பட்டு பொருட்களை வெளியில் இறக்கி சோதனையில் ஈடுபட்டனர்

இதன்போது குறித்த அத்தியாவசிய பொருட்களுடன் 13 கிராம் 20 மில்லிலீற்றர் ஜஸ்போதைப் பொருளும், 6 கிராம் 960 மில்லிக்கிராம் கஞ்சாவும், 104 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருட்களை மீட்டதுடன் லொறி சாரதி மற்றும் இரண்டு உதவியாளர்கள் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் லொறி ஒன்றையும் அத்தியாவசிய பொருட்களையும் கைப்பற்றினர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Last modified on Saturday, 28 March 2020 13:46
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd