web log free
December 22, 2024

“குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்படாது”

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நபரின் உடல் குடும்பத்திற்கு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் துணை இயக்குநர் வைத்தியர் பபா பலிஹவடன இதனை தெரிவித்துள்ளார். 

இதன்படி, பாதிக்கப்பட்டவரின் இறுதி சடங்குகள் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கத்தால் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில்,  நேற்று(28) ஒருவர் உயிரிழந்தார் கொரேனா வைரஸினால் இலங்கையில் பதிவான முதல் மரணம் இதுவாகும்.

அங்கொட வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய குறித்த நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்குட்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், சுமார் 113 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd