களுத்துறையிலிருந்து தப்பியோடி, கண்டி மயிலப்பிட்டியிலுள்ள தன்னுடைய காதலியின் வீட்டில் மறைந்திருந்த நபர், கைதுசெய்யப்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தலாத்துஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அந்த நபர், களுத்துறையிலுள்ள தன்னுடைய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததன் பின்னரே, காதலியின் வீட்டுக்கு தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில், தலாத்துஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.