பேருவளை, பன்னில கிராமத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னில பிரதேசத்தை வசித்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்தே, நேற்றிரவு (29) அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனையடுத்தே அந்த கிராமம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர், சுற்றுலாத்துறையுடன் கூடிய சாரதி ஆவார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு, இலங்கையில் சுமார் 20 இடங்களுக்கு மேல் அவர் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவருடன் சேர்த்து, பேருவளையில் மட்டும், 8 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.