web log free
December 21, 2024

2 இலட்சம் பேரை கொரோனா கொல்லும்

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, முழு உலகையும் தற்போது ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இதனால், முழு உலகமே ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

அமெரிக்காவில் பரவி வரும்  கொரோனா கிருமித்தொற்றுக்கு, ஏறக்குறைய 2 இலட்சம் பேராவது பலியாகக்கூடும் என்று அந்நாட்டு தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபௌசி, மில்லியன் கணக்கானோர் கிருமித்தொற்றால் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்றார்.

வேகமாக பரவி வரும் கொரோனா கிருமிக்கு எந்த மாநிலமும் எந்த நகரமும் தப்பாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்டு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூ யார்க், நியூ ஜர்சி ஆகிய மாநிலங்களில் உள்ளவர்கள், இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும்படி டாக்டர் ஃபௌசி அறிவுறுத்தினார்.

Last modified on Tuesday, 31 March 2020 02:06
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd