கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், அக்குறணையில் தலைமறைவாகியிருந்த நபர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், தன்னுடைய சைக்கிளில் வைத்தியசாலைக்கு வந்து, தன்னைத் தானே அனுமதித்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 15 ஆம் திகதியன்று சென்னையிலிருந்து நாடு திரும்பியவருக்கே கொரோனா தொற்றியுள்ளது.
அவருடைய வருகைதந்த அவருடைய நண்பர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான அந்த நபர், கெலிஓயாவில் பள்ளிவாசலுக்கும் சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல, கம்பளையில் பாதணை விற்பனை நிலையமொன்றுக்கும் சென்றுள்ளார்.
அவர், வசிக்கும் அக்குறணை, அலவத்துகொட உள்ளிட்ட கிராமங்களில் 347 பேர் வசிக்கின்றனர். அக்கிராமங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், 10க்கும் மேற்பட்ட பொலிஸ் சோதனை சாவடிகள் போடப்பட்டுள்ளன.