பப்பாசி மரம் ஒன்றை வெட்டி வீழ்த்த முயற்சித்த போது மரம் சிறுவன் மீது சரிந்து வீழ்ந்ததில் அவர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (29) இரவு உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர் .
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் மண்டூர் பலாச்சோலையைச் சேர்ந்த 10 வயதுடைய ரவிக்குமார் யபேஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள தமது வீட்டின் பகுதியில் இருந்த 30 அடி கொண்ட பப்பாசி மரம் ஒன்றை கடந்த 25 ம் திகதி உயிரிழந்த சிறுவனும் அவரின் 13 வயது சகோதரனுடன் சேர்ந்து அந்த மரத்தை பெற்றோருக்கு தெரியாமல் வெட்டி வீழ்த்துவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதன் போது 13 வயது சகோதரன் அந்த மரத்தில் கயிற்றைக் கட்டி கீழே வீழ்த்த கயிற்றை இழுத்துக் கொண்டான். மரத்தை 10 வயது சிறுவன் கோடரியால் வெட்டும் போது மரம் சரிந்து சிறுவன் மீது வீழ்ந்ததையடுத்து சிறுவன் தலை படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்