ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட இந்த சத்தியாகக்கிரக போராட்டத்தில் குதித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் திருப்தியாக இல்லை. மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்களை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் அவர் குதித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துள்ள நிலையில், நாளாந்தம் கூலி வேலைகளுக்கு செல்லுவோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகளை கொள்வனவு செய்வதற்கு, அவ்வாறான கூலி வேலை செய்வோரிடம் பணம் இல்லை. ஆகையால், நிவாரணங்களை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.