கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் சிக்கியுள்ள மலையக இளைஞர், யுவதிகளை தத்தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவருவேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட கடந்த 20ஆம் திகதியன்று தத்தமது ஊர்களுக்கு செல்லமுடியாது, பெருநகரங்களில் சிக்கிக்கொண்டுள்ள மலையக இளைஞர் யுவதிகள், வேலைகளுக்கு செல்லமுடியாமல், தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.
இதனால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைமைக்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர்.
அவ்வாறானவர்களுக் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு, தத்தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை எட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.