பேருவளை –பன்னில கிராமத்தில் 29 ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் மனைவி உள்ளிட்ட மூவர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், நேற்று (31) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.
இதனையடுத்து, பேருவளையின் பல இடங்களில் வீதித் தடைகள் போடப்பட்டுள்ளதுடன், அப்பகுதிக்குள் பிரவேசிக்கவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்குறணை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியின் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, நேற்று (31) இனங்காணப்பட்டுள்ளது.
இவற்றை நோக்கிமிடத்து, பேருவளையில் இதுவரை 12 பேரும், கண்டி-அக்குறணை பகுதியில் இதுவரை 4 பேரும் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.