நாடு முகம்கொடுத்து கொண்டிருக்கும் நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுப்பது தொடர்பில், கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில், நாளை (2) காலை 10 மணிக்கு நடைபெறும்.
இந்நிலையில், நாடு முகம் கொடுத்துகொண்டிருக்கும் நெருக்கடி குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நேரத்தை ஒதுக்கிக்கொண்டார்.
இந்த சந்திப்பு, ஜனாதிபதி மாளிகையில், இன்று (01) இடம்பெறவுள்ளது என அறியமுடிகின்றது.