கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடையும் இலங்கையரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இருவர் மரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு அப்பால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார்.
ஆக மொத்தத்தில் இலங்கையர் ஐவர், இதுவரையிலும் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்கா நியூயோர்க் மாகாணத்தில் வசித்துவந்த இலங்கையரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
அமெரிக்காவில் நியூயோர் மாகாணத்தில் வசித்த 50 வயதான இலங்கையர் ஒருவர் ஏற்கனவே மரணித்துவிட்டார்.
அவருடைய குடும்பத்தினரும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.