இன்று (01) முற்பகல் 10 மணிக்கு வெளியிடப்பட்ட தகவல்களின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 143ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
அதில், 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும் பதிவாகவில்லை என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள மாவட்டங்களின் தரவுகளின் பிரகாரம்
1. கொழும்பு 32 பேர்
2. புத்தளம் 25 பேர்
3. களுத்துறை 24 பேர்
4. கம்பஹா 11 பேர்
5. கண்டி 4 பேர்
6. இரத்தினபுரி 3 பேரும் அடங்குகின்றனர்.
இதேவேளை, குருநாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை,யாழ்ப்பாணம், மாத்தறை ஆகிய 7 மாவட்டங்களிலும் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏனைய மாவட்டங்களில், ஒருவரேனும் அடையாளம் காணப்படவில்லை.
ஆக மொத்தத்தில், நாட்டிலிருக்கும் 25 மாவட்டங்களில், 14 மாவட்டங்களிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.