கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதிலிருந்து பாதுகாப்பதற்கு ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் பல்வேறான முயற்சிகளை முன்னெடுக்கின்றன.
எனினும், ஒவ்வொரு நாடுகளை சேர்ந்தவர்களும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை பின்பற்றாது, பல்வேறான இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
ஊரடங்கு சட்டம் என்றுகூட பார்க்காமல் வீதிகளில் சுற்றிதிரிகின்றனர்.
இதனால், வீடுகளில் இருக்காமல் வீதிகளுக்கு இறங்கினால், எமன் தர்மர் வந்து உயிரை பறித்து சென்றுவிடுவார் என அறிவுறுத்தும் வகையில், விழிப்புணர்வு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நியாவில், ஆந்திரா மாநிலத்திலேயே பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எமதர்மர், சித்திரகுப்தர் வேசம் போட்டு வீதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விருவரும் அறக்கட்டளையொன்றை சேர்ந்தவர்கள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.