ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) மாலை முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.
இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பந்துல குணவர்தன, டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ருவன் விஜயவர்தன, தயா கமகே, பாலித ரங்கேபண்டார, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை, ஐ.தே.க குழுவினர் பாராட்டியுள்ளனர்.