கொரோனா வைரஸ் தாக்கத்தால் என்ன செய்வதென்று மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனார்கள்.
ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில், நகரங்களுக்குச் செல்லும் மக்கள் நீண்ட வரிசையில் நெடும் நேரமாக கால்கள் வலிக்க நிற்கவேண்டியுள்ளது.
ஒருவருடன் மற்றொருவர் பேசுவதில்லை. ஒரு மீற்றர் தூரத்திலேயே நிற்கின்றனர்.
இது மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் அரிசி வாங்குவதற்காக வந்திருந்த மக்களுக்கு நாற்காலி போட்டு, அமர வைத்துள்ளார் ஒரு கடைக்காரர்.
இதை சிந்தித்து செயலாக்கிய மனிதரை வாழ்த்துவோம் என டுவிற்றர் பக்கத்தில், வாழ்த்துக்கள் குவிகின்றன.