web log free
December 22, 2024

திடீரென புதைத்த சடலம் தோண்டியெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்ற சந்தேகத்தில், நேற்று (01) புதைக்கப்பட்ட சடலம், மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

கஹதுடுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மத்தேகொட வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 67 வயதான நபரே இவ்வாறு திடீரென மரணமடைந்துள்ளார். 

அந்த நபர், இலங்கைக்கு கடந்த 20ஆம் திகதியன்று மாலை தீவிலிருந்து திரும்பியவர். நேற்று (01) அதிகாலை திடீரென மரணமடைந்துள்ளார்.

அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மரணமடைந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,புதைக்கப்பட்ட சடலம் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த சடலத்தின் சில பாகங்கள், விசேட பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

 

Last modified on Thursday, 02 April 2020 02:38
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd