கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்தவரின் உடல் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் சற்றுமுன்னர் தகனம் செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.
மருதானையை சேர்ந்த அவரின் குடும்ப உறவினர்களுக்கு உடல் முன்னதாக காண்பிக்கப்பட்டது.
ஜனாஸாவை பெற்று அடக்கம் செய்ய குடும்பத்தார் நேற்று இரவு முதல் தீவிர முயற்சிகளை எடுத்தபோதும் மருத்துவ காரணங்களை காட்டி அதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்படவில்லை.