விகாரையின் விகாராதிபதி மற்றும் அந்த விகாரையை சேர்ந்த பிக்கு ஒருவர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளர். இதனையடுத்து அந்த விகாரை இழுத்து மூடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மாதம்பேயில் உள்ள விகாரையிலேயே இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தேசிய காய்ச்சல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர், பங்கேற்றிருந்த மரண வீட்டில் பிரித் ஓதிய நபருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.
இதேவேளை, நாட்டு மக்களின் நன்மையை கருத்தில் கொண்டும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் தலவாக்கலை லிந்துல நாகசேன ஸ்ரீ மஹிந்தாராம விகாரை, மறு அறிவித்தல் வரைக்கும் மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.