இலங்கையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், அந்த சட்டத்தை மீறினர் எனும் குற்றச்சாட்டில் 10,039 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு பின்னர், இன்று (02) வரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2,489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் யாவும், கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக நிறைவடைந்ததன் பின்னரே, வாகனங்கள் விடுவிக்கப்படும்.
இதேவேளை, இன்று (02) பிற்பகல் 12 மணிமுதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில், 305 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 77 வாகனங்களும் பொலிஸாரின் பிடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.