கொரோனா வைரஸ் காரணமாக அதிகூடிய அவதானமிக்க மாவட்டமாக கொழும்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும், 33 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கு அடுத்ததாக புத்தளம் மாவட்டம் உள்ளது. அம்மாவட்டத்தில் 25 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 24 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 11 பேரும் கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தலா நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின் பிரகாரம் குருநாகல் மாவட்டத்தில் இருவர் பாதிக்கப்பட்டு்ள்ளனர்.
இந்நிலையில், கேகாலை, காலி, மட்டக்களப்பு, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.