உலகையே சவாலுக்கு உட்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பிலான ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பெருகுவது தொடர்பில் அறிக்கையிட்டுள்ளது.
அடுத்தவாரத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் பட்டியலில், இன்னும் 244 பேர் இலங்கையில் இணைக்கப்படுவர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறு என்றாலும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஓரளவுக்கு திருப்தியளித்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வைரஸ் தொற்று வியாபித்தமையானது இலங்கையில் முதல் 20 நாட்களில், அமெரிகாவை விடவும் அதிகரித்துள்ளது. இலங்கையில், முதல் 20 நாட்களில், 150 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஆகையால் ஏனைய நாடுகளை விடவும், இலங்கை அதிகூடிய கவனத்தை செலுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இனங்காணப்படாத நோயாளர்கள் சமூகத்தில் ஊடுறுவிட்டனர். ஆகையால், தற்போதைய நிலைமை எதிர்வரும் வாரத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
உலகிலேயே அதிகூடிய பாதிப்பை கொண்டிருக்கும் இத்தாலியில், ஒன்பதாவது நாளில் 157 நோயாளர்கள் இனகாணப்பட்டனர். 3858 நோயாளர்கள் 20ஆவது நாளிலேயே இனங்காணப்பட்டனர் என்றும் அதில் குறிப்பட்ஸ்ரீடுள்ளது.
அமெரிக்காவில் முதலாவது நோயாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் 20ஆவது நாளில் இனங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 9 ஆகும். அங்கு 63ஆவது நாளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
எந்தவொரு நாட்டிலும் சுகாதார பிரிவினர் இருப்பர். எனினும், இதன் தாக்கம் அதிகரித்துவிட்டால் அவர்களால் கட்டுப்படுத்துவது கடினமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.