முன்னாள் அமைச்சர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்னவுக்கே கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த செய்தியை ராஜித சேனாரத்ன தன்னுடைய பேஸ் புக் பதிவின் ஊடாக மறுத்துள்ளார்.
இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள அவர், இதுதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.