கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பதா? எரிப்பதா? என்பது தொடர்பிலான கேள்விக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அளித்த பதில் சகலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
அலரிமாளிகையில் நடைபெற்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், “இந்த விடயம் தொடர்பில் தனியாக பேசவேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.
“தனியாக சந்திக்க தேவையில்லை. இவ்விடத்தில் அதிகாரிகள் இருக்கின்றனர். ஆகையால், உங்களுடைய பிரச்சினையை இவ்விடத்திலேயே பேசிவிட்டால் தீர்வு கிடைக்கும்” என்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
இதன்போது,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கிம், பைஸ்ர் முஸ்தபா உதய கம்பன்பில மற்றும் அமைச்சர் விமல் வீரவசன்ச ஆகியோர், பிரதமர் மஹிந்தவிடம் கேள்விகளை கேட்டனர்.
அதில், ரவூப் ஹக்கிம், பைஸ்ர் முஸ்தபா ஆகியோரின் கேள்விகளுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க பதிலளித்தார்.
உதய கம்பன்பில மற்றும் அமைச்சர் விமல் வீரவசன்ச ஆகியோர், சடலங்களை எரியூட்டுவது எவ்விதத்திலும் பிரச்சினையில்லை என நியாயப்படுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை எரியூட்டுவதை அதிகாரிகள் நியாயப்படுத்தினர்.
இதேவேளை, பௌத்தர்களின் சடலங்கள் கூட மதவழிபாடுகள் இல்லாமல் எரியூட்டப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது பதிலளித்தார்.