கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 159 பேராக அதிகரித்துள்ளது.
இதேவேளை அத்தொற்றுக்கு உள்ளாகி, காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரப் பிரிவின் தொற்றுநோய் விஞ்ஞான பகுதி அறிவித்துள்ளது.
இதில், மாத்தறை மாவட்டத்திலும் தொற்று நோய்க்கு உள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.