web log free
December 22, 2024

33 இலங்கையர்களுக்கு இந்தியா தடை

3 இலங்கையர்கள், நான்கு அமெரிக்கர்கள், 9 பிரித்தானியர்கள், 6 சீனர்கள் உட்பட்ட 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்களை இந்தியா தடைசெய்துள்ளது.

இதன் அடிப்படையில் அவர்களின் சுற்றுலா வீசாக்கள் யாவும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள ஜமாத் உறுப்பினர்கள் தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். இதில் பலர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் 379 இந்தோனேசியர்கள், 110 பங்களாதேசியர்கள், 63 மியன்மார் பிரஜைகள் மற்றும் 33 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக இந்திய உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கிர்கிஸ்தானின் 77 பேர், மலேசியாவின் 75 பேர், தாயலாந்தின் 65 பேர், வியட்நாமின் 12 பேர், சவூதியின் 9 பேர், பிரான்ஸின் 3 பேர் ஆகியோரும் இந்த தடைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாள் முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதுடில்லியில் உள்ள நிசாமுதீன் தலைமையகத்தில் 250 வெளிநாட்டவர்கள் உட்பட்ட 2300 செயற்பாட்டாளர்கள் தங்கியிருந்தமையை அடுத்தே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தலைமையகத்தில் இருந்ததாக கூறப்படும் 300 தப்லிகி செயற்பாட்டாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd