கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், திடீரென மரணமடைந்தமையால், அந்த வைத்தியசாலையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.
சிகிச்சை பெற்றுகொண்டிருந்த நிலையிலேயே அப் பெண் மரணமடைந்துள்ளார்.
அவர், புற்றுநோயால் மரணமடைந்தமை உறுதியானதை அடுத்தே, அப்பதற்றம் ஓரளவுக்கு தணிந்தது.
சிசிக்சைபெற்று கொண்டிருந்த போது, பெற்ற இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே, கொரோனா வைரஸால் அப்பெண் மரணமடையவில்லை என்பது உறுதியானது.
இந்நிலையில், அப்பெண்ணின் பூதவுடலை உறவினர்களிடம் வழங்குதவ்றகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.