கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
பல்வேறு தரப்பினரும் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு அமைவாகவே, அரசாங்கம் இதுதொடர்பில் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில், நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 6ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
அரசாங்கம் ஆலோசித்து வருவதைப்போல, ஊரடங்கு சட்டம் இம்மாதம் நிறைவடையும் வரையிலும் அமுல்படுத்தப்படுமாயின், இன்னும் 26 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.