கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்றுமாலை 4.30க்கு வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 11 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
அவர்களில் மூவர் யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் முகாமில், தனிமைப்படுத்தப்பட்டு கொண்டிருந்த நிலையில் இனங்காணப்பட்டனர்.
அதேபோல, தென்கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பி, தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த இருவரும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மேலும் இருவரில் புத்தளம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் மற்றொருவர் சிலாபத்தில் இருந்தும் இனங்காணப்பட்டனர்.
களுத்துறையில் மூடப்பட்டிருந்த பிரதேசத்திலிருந்து வருகைதந்து குழந்தை பிரசவித்தவரும், அக்குறணையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் நெருங்கி பழகியவரும் இதில் அடங்குகின்றனர்.