web log free
December 22, 2024

முஸ்லிம் மக்களுக்கு ஒரு விசேட அறிவித்தல்

உலகில் 200 க்கும் அதிகமான நாடுகளில் வியாபித்துள்ள கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் வீரியமாக பரவி வருகின்றது.

இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தல், ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தல், தனிமைப்படுத்தல் நிலையங்களை ஸ்தாபித்தல், மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும்.

அரசாங்கம் எடுத்த முதல் சில நடவடிக்கைகளுடன், முஸ்லிம் தலைவர்கள் ஏகமனதாக எடுத்த முடிவுகளின் அடிப்படையில் பள்ளிவாசல்களில் நடத்தப்படும் சகல வழிபாடு அல்லது வேறு எந்த வழிபாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளதுடன் நோயாளிகள் பதிவாகியுள்ள சில பகுதிகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன  (Locked Down).

இதற்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவோர் அதேபோல் அவர்கள் நெருங்கி பழகியவர்கள் ஆகியோரை இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளமையே ஆகும்.

எனவே முடக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் இணங்கி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூகம், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பிற தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

முன்னர் குறிப்பிட்டபடி, வெள்ளிக்கிழமை ஜும்மா பிரார்த்தனை உட்பட தேவாலயங்களில் செய்யப்படும் சகல பிரார்த்தனைகளும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட சட்டத்தை மீறும் எந்தவொரு நபர் பற்றிய தகவல் இருந்தல் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.

2020 மார்ச் 10 ஆம் திகதிக்கு பின்னர் எவரேனும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தால் அது தொடர்பிலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் உங்களுக்கு எந்த தொடர்பும் இருக்கக்கூடாது, அத்தகைய நபருடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்தால் நீங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

சுய தனிமைப்படுத்தலுக்கு தேவையான வசதிகள் உங்களிடம் இல்லையென்றால், உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.

ஒருவர் கொவிட் 19 வைரஸ் நோய்த்தொற்றின் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளை வெளிப்படுத்தினால் அவர்ஃஅவள் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை உடனடியாக நாட வேண்டும்.

நோயாளியை அழைத்துச் செல்வதற்கு முன்னர் வைத்தியசாலைக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தவும். அவ்வாறு அறிவிப்பதன் மூலம் வைத்தியசாலை ஊழியர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். நோயாளியை ஒரு தனியார் வைத்தியசாலைக்கோ அல்லது வேறு சுகாதார மையத்திற்கோ அழைத்து செல்லக்கூடாது.

அரசாங்கம் மற்றும் சட்ட பிரிவினரால் அமுல்படுது;தப்படும் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற அனைத்து சட்டங்களுக்கும் இணங்கி செயற்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விதி முறைகளுக்கு இணங்காதவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,

எனவே, மேற்கண்ட அறிவுறுத்தல்களையும் அரசாங்கத்தின் விதிகளையும் கைக்கொள்ளும் எந்தவொரு முஸ்லிமும் புனித குர்ஆன் மற்றும் புனித நபி அவர்களின் போதனைகளுக்கு ஏற்ப தனது கடமைகளை நிறைவேற்ற கடமைப்பட்டிருப்பார்.

அனைவரையும் கருணையுடன் நினைவு கூர்ந்து ஏற்பட்டுள்ள இந்த கொள்ளை நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு புனித அல்லாவிடம் பிரார்த்திக்கிறோம்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd