ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாளை சந்திக்கவுள்ளனர்.
கொரோனா தொற்று தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதென்றும், இதற்கான கோரிக்கை சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவினரை அண்மையில் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.