இலங்கையில், ஆறு மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல், ஏப்ரல் 6 ஆம் திகதி இன்று வரைக்கும், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் தொழில் நிமிர்த்தம் வந்திருந்த பலரும் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் பல்வேறான நெருங்கடிக்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்-சிங்கள புத்தாண்டும் வருகிறது.
ஆகையால், தளர்த்தப்படாமல் இருக்கும் மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டத்தை அவ்வப்போது தளர்த்தல், இன்றேல், முழுநாட்டுக்கும் அமுலாகும் வகையில், ஏப்ரல் 15ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், என்பது தொடர்பில் இன்று பிறபகல் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்படும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.