கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு இரத்த மாதிரிகள் குறித்த பரிசோதனைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கூறுகிறது.
சுகாதார அமைச்சினால் பெறப்பட்ட புதிய சோதனை உபகரணங்களின் துல்லியம் மற்றும் சரியான தன்மை குறித்து ஆராயப்படும் என்று அங்கொட தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரமா தெரிவித்தார்.
கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தெரிந்தோ, தெரியாமலோ பழகிய சுமார் 42,000 பேர் தொடர்பில், இராணுவ புலனாய்வாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில், கோவிட் 19 ஐ அடையாளம் காண்பதற்கான விசாரணை நடைமுறைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கூறுகிறது.
இரத்த மாதிரிகள் விரைவாக கண்டறியப்படுவதால் நோயாளிகளை விரைவாக அடையாளம் காண முடியும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கூறுகிறது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவி செயலாளர் டாக்டர் நவேந்திர சோய்சா கூறுகையில்,
“ தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இருவர், நோயாளிகளாக திரும்பி வந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் எங்கள் சோதனை திறனை அதிகரித்து வருகிறோம். நாங்கள் தற்போது 300 சோதனைகளை மட்டுமே செய்து வருகிறோம் என்பது ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது தெரியவந்தது. 160 நோயாளிகள் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களுடன் பழகியவர்கள் என்ற சந்தேகத்தில், 42,000 க்கும் மேற்பட்டோர் தொடர்பிலான தகவல்களை இராணுவ உளவுத்துறை பெற்றுள்ளது.
இந்த சோதனை செய்ய 42 நாட்கள் ஆகும். ஆகையால் புதிய சோதனை முறைகளுக்கு ஜனாதிபதி ஒப்புக்கொண்டார். தொழில்நுட்பக் குழு நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சோதனை செய்வதற்கு செலவு குறைவு. இந்த செயல்முறை நடக்காது என்று அறிவித்தோம். இது இப்போது 42,000 பேரை பரிசோதிக்க போகின்றோமா அல்லது 2 இலட்சம் பேர் வரை காத்திருக்க போகின்றோமா?. பரிசோதனையில் நேர்மறை உள்ளவர்களை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்புகள். நெகட்வி உள்ளவர்களை 14, 21 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்புங்கள் என்றார்
தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த சீனா, கொரியா பி.சி.ஆர் சோதனை பயன்படுத்தப்பட்டது. ஆன்டிபாடி சோதனைகள் பிற நோய் எதிர்ப்பு சக்தியை அளவிட பயன்படுத்தப்பட்டுள்ளன ”என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் அனில் ஜசிங்க கூறினார்.
“இதுபோன்ற விசாரணைகளை நாங்கள் பெற்றுள்ளோம். அவை அனைத்தும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள். ஐ.டி.எச் உடன் இணைந்து. விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் முடிவுகளைப் பயன்படுத்தலாம், ”என்று அவர் மேலும் கூறினார்